உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தமிழகத்துக்கு கர்நாடக அணை களில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகு திக்கு வந்து சேர்ந்தது. நேற்று முன்தினம் காலை 3,300 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப் படியாக உயர்ந்து நேற்று காலை 11 மணியளவில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியை எட்டியது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 7,905 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், இன்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.