ஜெயபாண்டி
குடியரசுத் தலைவர் நியமனத்தில் பாஜக அரசியல் செய்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்துல் கலாமைவிட காங்கிரஸின் பிரதிபா பாட்டீலும் பிரணாப் முகர்ஜியும் எந்த வகையில் சிறந்தவர்கள்?
மணிவண்ணன்
உமா பாரதி, கல்யாண் சிங், மோடி வரிசையில் ராம்நாத் கோவிந்த்! பங்காரு லட்சுமணனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே!
கருப்பசாமி
முகநூல் போராளிகள் எல்லாம் தனியறையில், தனிமையில் கத்திச் சண்டை போட்டுக்கொள்பவர்கள்தான். ஒரு சாரார் பெரியாரிய, முற்போக்கிய மற்றும் மாட்டிச, திராவிடிய, இந்துமத எதிர்ப்பியக் கருத்துகளைப் பதிந்துகொண்டிருக்க, இன்னொரு சாரார் தீவிரமாகச் சில கருத்துகளையும், வரலாற்றில் மனிதர்களை ஆழமாய் ஊன்றி வைத்தபடியும் இருப்பார்கள். இதன் நோக்கம் என்னவென்று பார்த்தால், சாதி அபிமானமாக மட்டுமே நிற்கும். ஒவ்வொன்றின் பின்னால் இருக்கும் நோக்கமும் ஆபாசமானதாக இருக்கிறது. தனித்த சுதந்திரமான சிந்தனை கொண்ட நபர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. ஒரு வழிமுறையை, ஒரு நபரை, தன் மதத்திலிருந்து வேறொரு மதத்தைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முதலில் தனது சொந்த மதத் தத்துவங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் இருக்க வேண்டும். அவரை மட்டும்தான் நாம் மதிக்க முடியும். இவ்வுலகில் வேறு எவரையும்விட உண்மையான நாத்திகரே போற்றுதலுக்கு உரியவர்.
துள்ளுக்குட்டி
ஒருமித்த கருத்தை உருவாக்கச் சென்ற குழு, தங்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று சொல்லாமல் உங்களின் தேர்வு யார் என்று கேட்டால் யார்தான் பதில் சொல்வார்கள். தனது வேட்பாளர் யார் என்று பகிர்ந்துகொள்ள மனம் இல்லாதவர்கள் ஏன் பொதுவேட்பாளரை தேர்வுசெய்ய முனைகிறோம் என்று பொதுவெளியில் பேச வேண்டும். முடிவுசெய்துவிட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை ஏன் அறிவிக்க வேண்டும்?
நடுப் பக்கங்களுக்குக் கட்டுரைகளை அனுப்புவோர் editpage@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். படைப்புகளை அஞ்சலில் அனுப்புவோர் பிரதி எடுத்துக்கொண்டு அனுப்பவும்; பிரசுரமாகாதவற்றைத் திருப்பி அனுப்ப இயலாது. பத்திரிகையில் வெளியாகும் கட்டுரையாளர்கள் / பேட்டியாளர்களின் கருத்துகள் அவர்களுடைய சொந்தக் கருத்துகளே. அவை எந்த வகையிலும் இப்பத்திரிகையின் கருத்து ஆகாது.
வாசகர்களின் சூடான, சுவையான கருத்துகள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் எண்ணங்கள் உடனடியாக எங்களை வந்தடைய feedback@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 044-28552215 என்ற தொலைநகலுக்கோ அனுப்புங்கள். அஞ்சல் மூலம் கடிதம் அனுப்ப: ஆசிரியர் இலாகா, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2.
ஆர்.ஆர்.முருகேசன்
ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு இந்தியாவில் தடை விதித்தார்கள். இன்று பிரதமர், ஜனாதிபதி இருவரும் ஆர்எஸ்எஸ்காரர்கள். பாரத் மாதா கீ ஜே!
நாசர்கான்
இஸ்லாமியர்களைச் சரிகட்ட அப்துல் கலாம்; தலித்களைச் சரிகட்ட ராம்நாத் கோவிந்த். அவ்வளவுதான்!
இனிகோ பயஸ்
பாஜகவினர் ஒருபோதும் தலித் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல... இந்த நாட்டின் மூத்த குடிமகனே ஒரு தலித்தான் என்று விவாதங்களின்போது பாஜகவினர் பேசிக்கொள்ள ஒரு ஏற்பாடு. மற்றபடி எந்த மாற்றமும் இங்கே நடக்கப்போவதில்லை.
ஜோதிமணி
மாட்டு அரசியலின் பெயரால் தலித்துகள் கட்டிவைத்து அடிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். உனா உட்பட பல இடங்களில் இக்கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. அப்போதெல்லாம் பாஜகவின் மாபெரும் தலித் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? குறைந்தபட்சம் இந்தக் கொடூரங்களைக் கண்டிக்கவாவது செய்தாரா?
கே.ஆர்.நாராயணன்: சில நினைவுகள்!
ஆளுங்கட்சியான பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் தொடர்பாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. கே.ஆர்.நாராயணன் தேர்வை ராம்நாத் கோவிந்த் தேர்வோடு ஒப்பிட முடியாது. நாராயணன் எப்படிப்பட்ட சுயசிந்தனையாளராக இருந்தார் என்பற்கான சின்ன உதாரணம், 2002 குஜராத் கலவரம் தொடர்பாக அவர் தெரிவித்த இந்தக் கருத்து.
“குஜராத் கலவரத்துக்குப் பிறகு வாஜ்பாய் திறமையான முறையில் எதையும் செய்ய வில்லை. குஜராத் கலவரத்தைத் தடுத்து நிறுத்தக்கோரி நான் அவருக்குப் பல கடிதங் கள் எழுதினேன். அவரிடம் இதுகுறித்து நேரிலும் பேசினேன். ராணுவத்துக்குத் துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரத்தை வழங்கியிருந்தால் குஜராத் கலவரங்கள் பெருமளவுக்குத் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், சட்டத்தின் கடமையை மத்திய - மாநில அரசுகள் சரிவர நிறைவேற்றவில்லை. நான் இரண்டாவது முறையும் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.
‘எல்லோரும் ஏகமனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டும் நான் சம்மதிக்கிறேன்’ என்று அவர்களிடம் சொன்னேன். நான் மீண்டும் ஜனாதிபதி ஆவதை பாஜகவினர் விரும்பவில்லை. அவர்களுடைய மறைமுகத் திட்டத் துக்கு (ஹிடன் அஜண்டா) நான் குறுக்கே நிற்பதாக அவர்கள் அஞ்சினர். பாஜக அரசு கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தனது ரகசியத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தது. தங்க ளுடைய கொள்கைகளைப் பரப்ப கல்வியைப் பயன்படுத்துவது தான் அவர்களுடைய நோக்கம். முரளி மனோகர் ஜோஷி நியமித்த பல்வேறு துணைவேந்தர்களின் நியமனத்தில் நான் தலை யிட்டதை அவர் கடுமையாக எதிர்த்தார். என்னுடைய தலையீடு சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயகரீதியிலானது. அனைத்துக்கும் மேலாக மதச்சார்பின்மையே என் நோக்கமாக இருந்தது!”
இப்படியொரு வார்த்தைகளை ராம்நாத் கோவிந்திடமிருந்து எதிர்பார்க்க முடியுமா?
- அப்பன் ரங்கராஜன்