சட்டப்பேரவையில் இன்று எரி சக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை கள் மீதான விவாதம் நடக்கிறது.
மானிய கோரிக்கை விவாதங் களுக்காக தமிழக சட்டப்பேரவை கடந்த 14-ம் தேதி கூடியது. இக்கூட்டத் தொடர் வரும் ஜூலை 19-ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தொடரில் இன்று எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. விவாத முடிவில் துறைகளின் அமைச்சர் பி.தங்கமணி பதிலளிக்கிறார்.
இதில், டாஸ்மாக் கடைகள் குறைப்பு, அதிமுகவின் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.