தமிழகம்

பாஜக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டி?- ம.தி.மு.க இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு எத்தனை இடங் களைப் பெறுவது என்பது குறித்து விவாதிக்க ம.தி.மு.க ஆட்சி மன்றக்குழு மற்றும் உயர்நிலைக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட் டணி சேர மதிமுக முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பேச்சு வார்த்தை துவங்கிவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்த கூட்டணியில் எத்தனை இடங்களைப் பெறுவது என்பது குறித்து சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு ம.தி.மு.க.வின் ஆட்சி மன்றக்குழுவும், உயர்நிலைக்குழுவும் கூடி, விவாதிக்க உள்ளன. இந்தக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் சென்னையில் நடக்கிறது

இதில் ம.தி.மு.கவின் ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, உயர்நிலைக்குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தக்கூட்டத்தில், ம.தி.மு.க. வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், மக்கள் செல்வாக்கு பெற்ற வேட்பாளர்கள் விவரம், பா.ஜ.கவிடமிருந்து ம.தி.மு.க. வுக்கு கேட்டுப் பெற வேண்டிய தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளனர். பிரச்சார வியூகம், தேர்தல் அறிக்கை, பிரச்சாரக்குழு ஏற்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி புதிய வாக்காளர்களைக் கவர்தல் ஆகியவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக, ம.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT