தரையிறங்கும்போது விமானத்தின் டயர் வெடித்த தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து நேற்றிரவு தனியார் விமானம் ஒன்று சென்னை வந்தது. விமானம் தரையிறங்கும் போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது விமானத்தின் முன்சக்கர டயர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானிகளை பாதுகாப்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுதளம் சரிசெய்யப்பட்ட பிறகு வழக்கம்போல விமானங் கள் இயக்கப்பட்டன.