சிவகாசி பட்டாசு விபத்துக்கு கார ணம் என்ன என்பது குறித்து தனிக் குழு அமைத்து விசாரணை நடத் தப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீயால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத் தில் வெடித்து 50 மீட்டர் தூரத்துக் கும் அப்பால் விழுந்தன. கடையில் பற்றிய தீயின் வேகத்தால் சாலை யின் எதிரில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
தீயை அணைக்க சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மாவட்ட ஆட்சியர் சிவஞானம், வருவாய் அலுவலர் முத்துக்குமரன், டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, எஸ்பி ராஜராஜன், சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாகா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வழக்கமாக நடைபெறும் வெடி விபத்துகளில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற பட்டாசு வெடி விபத் தில் ஸ்கேன் எடுக்க வந்த அப்பாவி பொதுமக்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 850 ஆலைகள் செயல் பட்டு வருகின்றன. சிவகாசி நகரில் ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு கடைகள் உள்ளதால் அவற்றை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்கேன் மையத்தில் உள்ள சி.டி. ஸ்கேன் எடுக்கும் கருவியில் தீ, வெடி விபத்து ஏற்பட்டு கதிரியக்கம் வெளியேறினால் 600 மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் சுவாச கோளாறு, தோல் வியாதிகள், கண் எரிச்சல் போன் றவை ஏற்படுவதுடன் புற்றுநோய் உண்டாக்கும் அளவுக்கு பாதிப்பு கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என மருத்துவக் குழு ஆய்வு நடத் தியது.
விபத்து குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கூறியதாவது: விபத்தில் இறந்த வர்களில் ஒருவர்கூட காயத்தால் இறக்கவில்லை. ஸ்கேன் மையத் தில் இருந்தவர்கள் புகையால் சூழப் பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். ஸ்கேன் மையத் தில் ஒரே நுழைவாயில் மட்டுமே உள்ளது. பின்பக்கம் வெளியேற வழி ஏதும் இல்லை. இதனால் தப்பிக்க வழியின்றி இறந்துள்ளனர். பட்டாசு கடைகள் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா என வட் டாட்சியர்கள் குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும் என்றார்
எஸ்பி எச்சரிக்கை
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் கூறி யதாவது: பட்டாசு கடை உரிமை யாளர் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் இதுபோன்று பட்டாசு கடை நடத்தி வருபவர் கள் பொதுமக்களுக்கும், தொழி லாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு பட்டாசு களை கையாள வேண்டும். விதி முறைகளை மீறும் பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு நடத்தப்படும் என்றார்.
பட்டாசு கடை உரிமையாளர் உட்பட இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.