சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் மார்க்கத்தின் பல் வேறு ரயில் நிலையங்களின் பார்க் கிங் மையத்தில் வாகனங்களை நிறுத்தினால், உதிரி பாகங்கள் காணாமல் போவதாகவும், ஒப்பந்தம் புதுப்பிக்கப் படாததுதான் இதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரயில் மார்க்கத்தில் 17 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் சேவையை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் ரயில் நிலை யத்துக்கு இரு சக்கர வாகனங்களில் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் வெவ்வேறு பகுதிகளுக்கு செல் கின்றனர். ஆனால், கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் 80 சதவீதம் ரயில் நிறுத்தங்களில் பார்க் கிங் செய்வதற்கு இடம் இருந்தும், அதற்கான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப் படவில்லை. இதனால், வாகனங்களை அங்கு நிறுத்தினால் உதிரி பாகங்கள் திருட்டு போகின்றன.
இது தொடர்பாக திருவான்மியூரைச் சேர்ந்த குமரகுருதாசன் என்பவர் கூறியதாவது:
எனது வீடு துரைப்பாக்கத்தில் உள்ளது. நான் சென்னை பாரி முனையில் உள்ள தனியார் நிறு வனத்தில் வேலை செய்து வருகி றேன். பறக்கும் ரயில் சேவை தொடங் கப்பட்ட காலம் முதல், இரு சக்கர வாகனத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயில் மூலம் பணியிடத்துக்கு செல்வேன்.
திருவான்மியூர் ரயில் நிலையத்தின் தரை தளத்தில் பார்க்கிங் பகுதி உள்ளது. அங்குதான் எனது வாக னத்தை விட்டு செல்வேன். ஆரம் பத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் மூலம், அப்பகுதியை சிலர் பராமரித்து வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டு களாக பார்க்கிங் செய்ய இடமிருந் தாலும், வண்டிகளை பாதுகாக்க யாரும் இருப்பதில்லை.
அப்படி ஒருமுறை எனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றபோது, அதில் இருந்த பேட்டரியை சிலர் எடுத்துச் சென்று விட்டனர். முகப்பு விளக்கு, கண் ணாடி, சீட் உறை என உதிரி பாகங் கள் காணாமல் போவதாக பலரும் கூறு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
“சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்களில் பார்க்கிங் ஒப்பந்தம் கோரப்படும்போது, யாரும் ஒப்பந்தம் செய்ய வருவதில்லை. ஒப்பந்தப் புள்ளிக்கான கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒப்பந்த காலத்துக்குள் இதற்காக செலவழித்த தொகையை எடுக்க முடியாது என்று கருதியே யாரும் ஒப்பந்தம் எடுக்க முன் வரவில்லை” என்று பெயர் சொல்ல விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.