வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மாநில காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணியில் தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள் ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு வட கிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த் துறைக்கு பொதுவான உத்தரவு களை தமிழக அரசு வழங்கியுள்ளது. மாநில மற்றும் சென்னை பெருநகர காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்கு தமிழக தலைமைச் செயலர் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நேற்று உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு டிஜிபிக்கு அனுப்பியுள்ள உத்தரவுகள் வருமாறு:
வடகிழக்கு பருவமழை காலத் தில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள், புயல் போன்றவை உருவாகி, கனமழையை உருவாக்கும். இதனால், பொதுமக்களின் உயிருக் கும் உடமைக்கும் பாதிப்புகள் ஏற்படும். தேவையான மற்றும் நேரத்துக்கேற்ற முன்னேற்பாடு களை செய்யும்பட்சத்தில் இந்த பாதிப்புகளை தடுக்கலாம். மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டங்கள் தற்போது மாவட்ட ஆட்சியர் தலைமையி லான துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அதில் ஒரு உறுப்பினர் என்பதால், காவல்துறையும் இதில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கடந்தாண்டு மழை பாதிப்பு களை கருத்தில் கொண்டு காவல் துறையிலும் போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை திட்ட தயாரிப்பில், தங்களது தரப்பு பரிந்துரை களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
தகுதியான காவல்துறை அதி காரியை நியமித்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் சிறப்பு படை வீரர்களை பயன்படுத்துவது, பணிக்கு அனுப்புவது தொடர்பான திட்டம் தயாரிக்க வேண்டும். அந்த திட்டம், மாவட்ட, வட்ட, கிராம மற்றும் கடலோர பகுதிகளுக்கு தயாரிக் கப்படும் மேலாண்மை திட்டங்க ளுடன் இணைந்து செயல்படும் நிலையில் அமைய வேண்டும்.
மீட்பு, வெளியேற்றம், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக தேர்வு செய்யப்படுவோருக்கு உரிய பயிற்சிகள் தேவைப்படும். மாநில பேரிடர் மீட்பு படை தயாரித்துள்ள பயிற்சி திட்டத்தை பயன்படுத்தலாம் . வருவாய்த்துறையினர் மற்றும் இதர பிரிவினருடன் இணைந்து பயிற்சி ஒத்திகை நடத்தலாம்.
பாதிப்புக்குரிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதி க ளுக்கான உடனடி மீட்புப்பணி க ளுக்கான ஒட்டுமொத்த திறனும் பொறுப்பு அதிகாரிகளிடம் ஒப்ப டைக்க வேண்டும். அப்பகுதியில் அனைத்து அதிகாரிகளும், அலு வலர்களும், விரைவாக தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அவர்கள் விடுப்பில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மாவட்ட அவசர இயக்க மையத்துடன் காவல்துறை கட்டுப்பாட்டறை இணைக்கப்பட்டு, கள நிலை, பருவகால கணிப்புகள் உடனுக்குடன் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இந்த பருவகாலத்தில், மாவட்ட அவசர இயக்க மையத்துக்கு உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
மீட்பு சாதனங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து காவல்துறை வாகனங் கள், போக்குவரத்து வாகனங் களும் பணிக்கு செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவசரகால மீட்பு மற்றும் மறு வாழ்வு பணிக்கு, ஆட்கள் செல் லவும், வாகனங்கள் செல்லவும், இந்த பருவமழை காலத்தில் போக்குவரத்து திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப் பதுடன், வாகன போக்குவரத்து மற்றும் உயிரிழப்பு தொடர்பான சான்றளிப்பையும் காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளூர் தன்னார்வலர்களை ஒருங்கி ணைத்து, பேரிடர் நிகழ்வுகளில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு அளித்துள்ள உத்தரவில், ‘‘பெருநகர் காவல் கட்டுப்பாட்டறை, பெருநகர் சென்னை மாநகராட்சியின் கட்டுப் பாட்டறையுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற தேவையான அளவுக்கு பம்ப்கள், இயக்குபவர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
தீயணைப்புத்துறையி்ன் கட்டுப் பாட்டறை, மாவட்ட அவசர செயல் பாட்டு மையத்துடன் இணைக்கப் பட்டு, அங்கு தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பருவமழை பாதிப்பு களை எதிர்கொள்ள தேவையான இயந்திரங்கள், தளவாடங்கள் போதுமான அளவில் இருக்கிறதா? இயங்கும் நிலையில் உள்ளனவா என்பதை கண்காணித்து தயார் நிலையி்ல் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், காவல்துறை டிஜிபி, சென்னை பெருநகர காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கி, தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உரிய முறையில் செய்ய வேண்டும். இதில், தவறுகள் நேர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.