தமிழகம்

தூத்துக்குடி அருகே சென்னை கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே கல்லூரி மாண வர் உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 5-வது தெருவை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் காசிராஜன் (24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் சிசிடிவி கேமரா ஆப ரேட்டராக வேலை செய்து வந்தார்.

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசலை சேர்ந்த நாரா யணன் மகன் ராஜலிங்கம் (20). இவர், சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கள் இருவரது உறவினரான தூத் துக்குடி அருகேயுள்ள பேரூர ணியை சேர்ந்த பத்மநாபன் என்பவ ருக்கு நேற்று திருமணம் நடை பெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்கச் சென்ற காசி ராஜன், ராஜலிங்கம் ஆகிய இரு வரும், அன்று இரவில் மணமக் களை வாழ்த்தி டிஜிட்டல் போர்டு களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பேரூர ணியை சேர்ந்த ராஜ்குமார் மகன் விக்ரம்(23) என்பவர், டிஜிட்டல் போர்டு குறித்து கிண்டல் செய்துள் ளார்.

அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பெரி யவர்கள் மூவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காசிராஜன், ராஜலிங்கம் ஆகிய இருவரும் டிஜிட்டல் போர்டை கட்டிவிட்டு, அங்கிருந்த மோட்டார் அறையின் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கினர்.

நேற்று காலை திருமணத்துக் காக மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள், மணப்பெண் ஊரான சாத்தான்குளத்துக்கு வேன் மற்றும் காரில் புறப்பட் டனர். காசிராஜன் மற்றும் ராஜலிங் கத்தை காணாததால் உறவினர் கள் தேடியுள்ளனர். அப்போது மோட்டார் அறை மொட்டை மாடி யில் இருவரும் கழுத்து அறுக் கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ் வின் கோட்னீஸ் மற்றும் தட்டப் பாறை போலீஸார் விசாரணை நடத்தினர். விக்ரம் தலைமறை வாகி விட்டார். எனவே, அவர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப் படுகிறது.

SCROLL FOR NEXT