மதிமுக மாணவரணி மாநிலச் செயலாளராக மணவை தமிழ்மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதிமுகவின் மாணவரணி மாநில துணைச் செயலாளராக இருந்து வரும் மணவை தமிழ்மாணிக்கம், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாணவரணியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.