கோடை கால வெயிலின் தாக்கத்தி லிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சேலம் ஆட்சியர் வா.சம்பத் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:
கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள, தமிழக அரசு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை,வருவாய் துறைகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. கோடைகாலங்களில் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடித்திடவும், பருத்தி ஆடைகளை தளர்வாக அணிவதாலும், நீர்சத்து அதிகம் கொண்டுள்ள பழங்களை உட்கொள்வதாலும், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படும் நேரமான நண்பகல் 12 மணி முதல் மாலை 3 வரை அவசிய தேவை இல்லையெனில் வெளியில் செல்வதை குறைத்து கொள்ளலாம். கோடை காலங்களில் உடை தாராளமா கவும், இறுக்கமாக அணியாமலும், பருத்தி உடையாகவும் மற்றும் மிதமான நிறமுடையவற்றை அணிய வேண்டும். 450 செல்சியஸ்க்கு மேல் வெப்பம் இருக்கும் போது உடலில் கொப்புளம், அதிக வியர் வையினால் நீர்வறட்சி தன்மை, கண் சோர்வு, உடல் தள்ளாட்டம், மயக்கம் மற்றும் கீழே விழுதல் கூட ஏற்படலாம்.
சூடான உணவு, அவசர உணவுகள், மாமிச உணவு வகைகள், கார உணவுகள் மிளகு, திப்பிலி, சுக்கு மற்றும் அஜினோமோட்டோ கலந்து உணவுகளை தவிர்க்க வேண்டும். உச்சி வெயிலில் குறிப்பாக 12 முதல் 3 மணிவரை பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். காலனி அணியாமல் வெயிலில் பிரவேசிக்கக்கூடாது.
கோடை காலத்தில் அதிக வெப்பத்தினால் தசை வறட்சி, அதிக வியர்வையினால் உப்பு படிதல், உடல் தளர்வு, சோர்வு, மனநிலை பாதிப்பு, குழப்பம் மற்றும் கண்பார்வை இரண்டிரண்டாக தெரிதல் போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தொப்பி அணிதல் மற்றும் தலையுறை அணிதல் வெயில் காலத்தில் சிறந்தது. தோலில் ஏற்படும் காயங்கள், அரிப்பு மற்றும் இதர தோல் நோய்களுக்கு உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் உள்ளாட்சித்துறைகள் மூலம் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடைகாலங்களில் உடலுக்கு தேவையான நீர்சத்து குறையாத வகையில் பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.