தமிழகம்

ரயில் பயணிகளுக்கு 139 எண் மூலம் கூடுதல் தகவல்கள்

செய்திப்பிரிவு

ரயிலில் பயணம் செய்யும்போது போய் சேரும் இடம் வருவதற்கு சற்று முன்பாகவே உங்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த ரயில் விசாரணை முறை (139) 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண்ணில் தொடர்புகொண்டு ரயிலில் காலியாக உள்ள இடம், முன்பதிவு டிக்கெட்டின் நிலை ஆகியவற்றை பயணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ரயில் வந்து கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாகத் தெரிவிக்கும் வசதி, பயணிகள் போய்ச்சேரும் இடம் வருவதற்கு சற்று முன்னதாகவே செல்போன் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி, செல்போன் மூலம் எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற வசதிகள் மேற்கண்ட எண்ணில் (139) சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த கூடுதல் தகவல் மற்றும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT