உதகைக்கு கடந்த இரு மாதங் களில் 10 லட்சம் சுற்றுலா பயணி கள் வந்துள்ளனர். ஆனால், சுற்றுலா மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிற சுற்றுலா தலங்களுக்கு வருகை குறைவாக உள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு இந்த ஆண்டு, ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் வந்துள்ளனர். கடந்தாண்டைவிட ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 653 பேர் அதிகமாக வந்துள்ளனர்.
தொட்டபெட்டா சிகரத்துக்கு ஏப்ரல் மாதம் 6,682 பேர், மே மாதம் 11,221 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரு மாதங்களில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 581 பேரும், காட்டேரி பூங்காவில் 22,030 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
உதகை சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்ப தால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்கக் கூடிய இடங்களில் முதலிடம் வகிப்பது தாவரவியல் பூங்கா.
இங்கு இரு மாதங்களில் 10 லட்சம் பேர் வந்துள்ள நிலையில், பிற சுற்றுலா தலங்களில் இதில், பாதி பேர் கூட செல்லவில்லை.
இதற்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.
புதிய அம்சங்கள் ஏதுமில்லை
அவர்கள் கூறும்போது, ‘நீலகிரி மலை மாவட்டம் என்பதால், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை, குறிப்பாக சாலைகள், போக்கு வரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள். கோடை காலத்தில் போக்குவரத்து இரட்டிப்பாகி விடுகிறது. குறுக லான சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனால் எளிதில் காணக் கூடிய தாவரவியல் பூங்காவை மட்டும் கண்டுகளித்து சென்று விடுகின்றனர்.
மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளைக் கவர புதிய அம்சங்கள் ஏதும் இல்லை. மேம்படுத்தினால் தான் சுற்றுலா பயணிகளை தக்க வைத்துக் கொள்ள முடியும்’ என்றனர்.