தமிழகம்

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை முட்டி காவலர் பலி: ராப்பூசலில் மேலும் ஒரு இளைஞர் இறப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், வத்திரா யிருப்பு அருகே உள்ள கான்சா புரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதில் ஆயுதப்படை காவலர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை விலக்கக் கோரி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவர்களும், இளைஞர்களும் போராடி வந்தனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயி ருப்பு அருகே உள்ள கான்சாபுரத் தில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப் பட்டது. 50-க்கும் மேற்பட்ட காளை கள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. நூற்றுக் கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இதைக் கண்டு களிக்க ஆயிரக்கணக் கானோர் திரண்டனர். வாடிவாச லில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கிய நிலையில், புதுப்பட்டியைச் சேர்ந்த ஒருவரது காளை அவிழ்த்து விடப்பட்டபோது எதிர்பாராத விதமாக, கூட்டத்துக் குள் ஆக்ரோஷமாக புகுந்த காளை பலரை முட்டித் தள்ளி யது. அங்கு பணியில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் ஜெய்சங்கர்(26) என்பவரை முட்டித் தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வத்திரா யிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவ ருக்கு திருமணமாகி 2 குழந் தைகள் உள்ளன.

மேலும் ஒரு இளைஞர் இறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி யதில் லட்சுமணப்பட்டியைச் சேர்ந்த மோகன், ஒடுக்கூரைச் சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் இறந்தனர்.

காயமடைந்தவர்களில் ஜல்லிக் கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்னவாசல் அருகேயுள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கருப்பையாவும்(30) ஒருவர். மாடு முட்டியதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில் இலுப்பூர் அரசு மருத் துவமனையிலும், பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையிலும் கருப்பையா அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

          
SCROLL FOR NEXT