தமிழக மீனவர்கள் மீதான தாக்கு தலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள் மீது தாக்கு தல் தொடர்கிறது. இவ்வாறு இருக் கும்போது இப்பிரச்சினை எப்படி தீரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ராமேசுவரம் மீனவர் பிரிட் ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரரை கண்டுபிடித்து இந்தியா அழைத்து வந்து தண் டிக்கக் கோரி ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உதவி சொலிசிட்டர் ஜென ரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிட்ட தாவது:
மீனவர் பிரிட்ஜோ கொலை தொடர்பாக இலங்கையில் தனியாக விசாரணை நடத்தி வருவதாக இலங்கை சென்றிருந்த இந்திய துணை குடியரசுத் தலைவரிடம் இலங்கை பிரதமர் தெரிவித்துள் ளார். அதே நேரத்தில் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கவில்லை எனவும், இந்தியாவின் விசார ணைக்கு ஒத்துழைப்பதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. மற் றொரு நாடு மீது குற்றம் சாட் டப்பட்டிருப்பதால் இப்பிரச்சி னையை ராஜதந்திரத்துடன் அணுக வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெறு வதாக தெரிவிக்கிறீர்கள். பேச்சு வார்த்தை நடைபெறும்போது ஒரு பக்கம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்படியிருக்கும்போது இப்பிரச் சினை எப்படி தீரும் என்றனர்.
இதையடுத்து ஜி.ஆர்.சுவாமி நாதன் தொடர்ந்து வாதிடும்போது, இந்திய படகு, இந்திய மீனவர் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மண்டபம் கடலோரக் காவல் படையே விசாரிக்கலாம். நீதிமன்ற விசாரணையின்போது மத்திய அரசிடம் அனுமதி பெற்றால் போதுமானது என்றார்.
இதையடுத்து மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட இடத்தை அடை யாளம் கண்டுபிடித்து நீதிமன்றத் துக்கு தெரிவிக்க வேண்டும் எனப் போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.