சென்னையில் ஆளுநரை சந்திப் பதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் துக்கு சென்ற சசிகலா, அங்கு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாலை 6.52 மணி அளவில் ஜெய லலிதா நினைவிட வளாகத்துக்கு சசிகலா வந்தார். அப்போது வழி நெடுகிலும் நின்றிருந்த தொண் டர்கள் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் படங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன், “சின்னம்மா வாழ்க” என கோஷம் எழுப்பி வர வேற்றனர். தொண்டர்கள் அனை வருக்கும் வணக்கம் செலுத்திய வாறு ஜெயலலிதா நினைவிடத் தினுள் சசிகலா நுழைந்தார். அங்கு மலர் வளையம் வைத்தும், 3 முறை மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளு நரிடம் வழங்க இருந்த ஆவணங் கள் கொண்ட உறையை ஜெய லலிதா சமாதி மீது வைத்து வணங் கினார். பின்னர் ஜெயலலிதா நினை விடத்தை ஒருமுறை சுற்றி வந்தார். அப்போது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பின்னர் நினைவிடத்தில் மண்டியிட்டு வணங்கினார்.
அதன் பின்னர் ஆவணங்களைக் கையில் எடுத்துக்கொண்ட சசிகலா, கண்களை மூடி சில விநாடிகள் நின்று வணங்கினார்.
அங்கிருந்து எம்ஜிஆர் நினை விடத்துக்கு சென்ற அவர், அங்கும் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் இரவு 7 மணிக்கு காரில் ஏறி, ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார்.
இந்த 8 நிமிடங்கள் வரை, ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சசிகலாவுடன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக் குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா உள்ளிட்டோர் வந்திருந்தனர். அங்கு குவிந்திருந்த சசிகலா ஆதரவாளர்கள், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.