பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப் பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவ ரான பி.டி. அரசகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவந்த பி.டி. அரசகுமார் மீது, தனது கல்வி நிறுவனங்களில் பங்குதாரராகச் சேர்ந்தால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் எனக் கூறி, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு களில் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
மாவட்டக் காவல் துறையின் பரிந்துரையின் பேரில், பி.டி. அரசகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மனோகரன் உத்தரவிட்டார் .