நெய்வேலி என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி தீபற்றி எரிந்து வருகிறது. இதை அணைக்கும் பணியில் என்எல்சி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி பல்லாயிரம் டன் மலை போல் குவித்து சேமித்து வைக்கப்பட்டுள் ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நிலக்கரி சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமள வென பரவியது.
இதனால் அந்த பகுதி முழுவ தும் புகை மண்டலமாக காட்சி யளிக்கிறது. அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி தொடர்ந்து எரிவதால் என்எல்சி இந்தியா நிர்வாகத்துக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற் பட்டுள்ளது.
சுரங்க பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் புகை மண்டலத் தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பணிபுரிய முடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. என்எல்சி ஊழியர்கள், தண்ணீர் லாரிகள் மூலம் நீர் பீச்சு அடிக்கும் கருவிகளைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2-வது சுரங்கத்தில் இதேபோல் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.