மக்கள் நலக்கூட்டணியின் பிளவு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
கோவையில் அவர் இது குறித்து கூறியதாவது:
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணி யின் ஆதரவைக் கேட்டபோதே, அவர்களால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்தோம். எதிர்பார்த்ததைப் போலவே அவர்களது கூட்டணி பிரிந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிற்க வேண் டும் என்பதற்காகவே போட்டியிடு கிறார்கள். அவர்களால் பெரிய அரசியல் மாற்றம் ஏதும் இருக்காது.
பாஜக சார்பில் நிறுத்தப்பட் டுள்ள வேட்பாளர் கங்கை அமரன் வெற்றி பெறுவது உறுதி. அதிகார பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற ஆளுங்கட்சி முயற்சிக்கும். ஆனால், நாங்கள் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம்.
கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் கொலை செய் யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக் கது. இந்த சம்பவத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த யாருக்கே னும் தொடர்பு இருந்திருந்தால் பிரச்சினை பூதாகரமாக மாறியிருக் கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்