தமிழகம்

கலிங்கப்பட்டியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி: வைகோ தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

கலிங்கப்பட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை, மதிமுக பொதுச் செய லாளர் வைகோ நேற்று தொடங்கி வைத்தார்.

வைகோவின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், கலிங் கப்பட்டியில் உள்ள சின்னஞ்செட்டி ஊருணியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியைத் தொடங்கிவைத்து வைகோ பேசிய தாவது:

சீமைக் கருவேல மரங்களை முழுவதும் அகற்றாவிட்டால் தமிழகத்தில் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள் ளது. இந்த மரத்தின் அடியில் நிற்கும் பசுக்கள், ஆடுகளுக்கு சினை பிடிப்பதில்லை.

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடர்ந்து, நானே ஆஜராகி வந்தேன். தற்போது சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இம்மரங்களை அரசே முற்றிலுமாக அழிக்க முடியாது. மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து கள மிறங்கினால்தான் முடியும்.

மது ஒழிப்பில் கலிங்கப்பட்டி முன்னுதாரணமாக இருந்தது போல், சீமைக் கருவேல மரங் களை அகற்றுவதிலும் கலிங்கப் பட்டி முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அந்தந்த ஊரில் மாண வர்கள், பொதுமக்கள், விவசாயி கள் இணைந்து விடுமுறை நாட் களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT