அரியலூர் அருகேயுள்ள சிறுகடம் பூர் தலித் சிறுமி நந்தினி ஜனவரி.14-ம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார்.
இந்நிலையில், அவரது குடும் பத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆறுதல் சொல்லிவிட்டு பத்திரிக்கையாளர் களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்த தாவது: நந்தினி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். இதில் சிபிசி ஐடி விசாரனை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வரும் 10-ம் தேதி திமுக சார்பில் அரிய லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட ஒருசில காவலர்களை யும் கைது செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் பெண்க ளுக்கு 13 அம்ச திட்டம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. எங்கு பார்த்தாலும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை என்ற நிலையில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. நந்தினி கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரி வித்தார். முன்னதாக நந்தினி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவியை ஸ்டாலின் வழங்கினார்.