தமிழகம்

கல்லூரி மாணவர்கள் மோதல் பேருந்து கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது

செய்திப்பிரிவு

தண்டையார்பேட்டையில் பேருந்தில் இரு கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

சென்னை சுங்கச்சாவடியில் இருந்து பட்டினப்பாக்கம் நோக்கி நேற்று காலை 6டி மாநகர பேருந்து சென்றது. பேருந்தின் ஓட்டுநராக ஜான், நடத்துநராக தினேஷ் இருந்தனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை யில் மகாராணி திரையரங்கம் அருகே பேருந்து வந்து கொண்டி ருந்தது. அப்போது பேருந்துக்குள் இருந்த தியாகராஜா மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். வண்ணாரப்பேட்டை தியாகராஜா கல்லூரி அருகே வந்தபோது பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார்.

அப்போது கீழே இறங்கிய சில மாணவர்கள், சாலையில் கிடந்த கற்களை எடுத்து பேருந்து மீது சரமாரியாக வீசினர். இதில் பேருந்தின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்தன. ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பேருந்தில் இருந்த சில பயணிகள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த தும் தண்டையார்பேட்டை போலீ ஸார் விரைந்து வந்தனர். போலீஸாரை பார்த்த மாணவர் கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தி, மணலியை சேர்ந்த தியாகராஜா கல்லூரி மாணவர் தினேஷ், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாநில கல்லூரி மாணவர் வினோத் ஆகிய இருவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT