எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளிடம் நகைப்பறிப்பு உட்பட குற்றங்களை தடுக்க, அதிக நகை அணிந்து செல்லும் பெண்கள் மற்றும் சந்தேக நபர்களின் முகவரிகளை ரயில்வே போலீஸார் சேகரிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
சென்னைக்கு அடுத்து, அதி களவில் பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக மதுரை சந்திப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். பயணிகளிடம் நகைப்பறிப்பு உட்பட பல்வேறு குற்றங்களை தடுக்க, ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகா ப்பு படையினர் பல்வேறு நடவடிக்கையை எடுக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு ரயிலிலும், போலீஸார் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே கூடுதல் டிஜிபி லட்சுமி பிரசாத் உத்தரவின் பேரில், பயணிகளிடம் விண்ணப்பம் கொடுத்து முகவரி உள்ளிட்ட விவரம் சேகரிக்கும் புதிய நடைமுறை கடந்த ஒரு மாதத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீஸார் அனைத்து பெட்டிகளுக்கும் செல்லும்போது, அதிக நகைகள் அணிந்து இருக்கும் பெண்களிடமும் படிவம் ஒன்றை கொடுத்து, முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களை சேகரிக்கின்றனர். அதே பெட்டியிலுள்ள பயணிக்கும் சந்தேக நபராக கருதினால் அவர்கள் பற்றிய விவரங்களையும் போலீஸார் பெறுகின்றனர்.
இதன்மூலம் எந்த பெட்டியில் நகைப்பறிப்பு, பொருட்கள் திருடு போனாலும், போலீஸார் விரைந்து கண்டுபிடிக்க உதவும் என, போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ரயில்வே இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி கூறியதாவது: சென் னையை அடுத்து, மதுரை ரயில் நிலையில் பயணிகள் அதிக மாக கூடுகின்றனர். இங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓடும் ரயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைப்பறிப்பு, குடி போதையில் தகராறு செய்தல் உட்பட பல்வேறு குற்றங்களை தடுக்க, உதவும் வகையில் பயணிகளிடம் படிவம் கொடுத்து முகவரிகளை சேகரிக்கிறோம்.
நகை, பொருட்களை பறி கொடுத்தவர்கள் புகார் தெரிவித்தால், அதே பெட்டியில் பயணித்த சந்தேக நபர்கள் குறித்து விசாரிக்க உதவும். சந்தேக நபர்கள் போலி முகவரி கொடுத்திருந்தாலும், செல்போன் நம்பர் மூலம் முகவரியை கண்டறியலாம். மதுரையின் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் படிவம் கொடுத்து முகவரி சேகரிக்கிறோம். ஒவ்வொரு போலீஸ்காரரும் பணியின்போது, 20க்கும் மேற்பட்ட முகவரி விவரங்களை சேகரிக்கின்றனர். அதிக நகை அணிந்து செல்லும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படு த்துகிறோம். இது போன்ற நடவடிக்கையால் நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தடுக்கப்படும், என்றார்.