தமிழகம்

காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம்: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''காங்கிரஸ் எதிர்க்கட்சியான பிறகு காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசை விமர்சிக்கிறது. குடியுரிமைச் சட்டம் சரி அல்லது தவறு என்பதை விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் குடியுரிமைச் சட்டம் பின்பற்றப்பட்டது. இதே சட்டத்தின் படி மக்கள் கைது செய்யப்பட்டனர்.

மோடி பிரதமரான பிறகு பாஜக ஆட்சியில் குடியுரிமைச் சட்டம் பற்றி ஏன் காங்கிரஸ் விவாதிக்கிறது? இந்த சட்டம் தவறானது என திடீரென முடுவெடுத்து காங்கிரஸ் விமர்சிப்பது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தீர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக ஆளுநர் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் மத்திய அரசு உரிய நேரத்தில் நியமனம் செய்யும். காவிரிப் பிரச்சனை நீதிமன்றத்தில் மூலம்தான் தீர்வு காணப்படும்'' என வெங்கய்ய நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT