தமிழகம்

ஆங்கில புத்தாண்டு: ஆளுநருக்கு முதல்வர் வாழ்த்து

செய்திப்பிரிவு

ஆங்கில புத்தாண்டையொட்டி ஆளுநர் ரோசய்யாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பிவைத்தார்.

அந்த கடிதத்தில், "மகிழ்ச்சியான 2016 புத்தாண்டில் தங்களுக்கும் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT