தமிழகம்

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட் டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்துச் சென்றனர்.

கோட்டைப்பட்டினம் மற் றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அதில், கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த ராஜா, சீனியப்பா, ரமேஷ், மணி, முகமது காசிம், துரைராஜ், ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த பிர காஷ், முருகேசன், வைத்தி, சதாம்உசேன், ரபீக், ராஜ கோபால் ஆகியோர் 2 படகு களில் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துள்ளனர். அப் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, 12 மீனவர்கள், 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT