தமிழகம்

உள்நாட்டு பருப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும்: பாரிவேந்தர் கோரிக்கை

செய்திப்பிரிவு

உள்நாட்டு பருப்பு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்நாட்டு பருப்பு உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே ஏறக்குறைய 3 முதல் 3.5 மில்லியன் டன்கள் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 1 கிலோ பருப்பு 30 ரூபாய் என்கிற விலையில், மாதந்தோறும் 21 ஆயிரம் டன் பருப்பு வகைகள் பொதுமக் களுக்கு வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

எனவே, இறக்குமதியை படிப்படியாக குறைத்து, பருப்பு வகைகளின் உற்பத்தியை நம் நாட்டிலேயே அதிகரிக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு கடனுதவி, புதிய தொழில்நுட்பம், குறைந்தபட்ச ஆதாரவிலை ஆகியவற்றை அரசு நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT