தமிழகம்

கட்டிடங்களின் உள்பூச்சுக்கு புதிய பிளாஸ்டர் அறிமுகம்: சிமெண்ட், மணல் தேவையில்லை

செய்திப்பிரிவு

புதிய கட்டிடங்களின் உள்பூச்சுக்கு சிமெண்ட், மணலுக்குப் பதிலாக ‘பில்ட் ஆன் ஜிப்ஸம்’ என்ற மாற்றுப் பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. பில்ட் ஆன் என்ற நிறுவனம், ‘பில்ட் ஆன் ஜிப்ஸம் பிளாஸ்டர்’ என்ற பெயரில் இந்த புதிய பிளாஸ்டரை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து இதன் தமிழக விநியோகஸ்தரான சிக்னேச்சர் லைஃப் ஸ்டைல்ஸ் நிறுவன இயக்கு நர் நிர்மல் கே.தீரன், சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்டிடங்களின் உள்புறச் சுவர்கள், மேற்கூரைகளின் பூச்சு வேலைகளுக்கு சிமெண்ட், மணலுக்குப் பதிலாக இந்தப் பிளாஸ்டரைப் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தினால் சுவர் கள் பளபளப்பாகவும் மிக வெண்மை யாகவும் காட்சியளிக்கும்.

செலவு குறையும்

இதனால் உள்புறச் சுவர்களில் பட்டி பார்க்கும் வேலை தேவை யில்லை. மேலும், ஒரு மாதம் செய்ய வேண்டிய உள்பூச்சு வேலையை இந்த பிளாஸ்டரைப் பயன்படுத்து வதால் ஒரு வாரத்துக்குள் முடித்து விடலாம். இதன் காரணமாக உழைப்பும், நேரமும் கணிசமாக மிச்சமாகும்.

வெள்ளை நிறச் சுவர்களை விரும்புவர்கள் வர்ணம் அடிக்கத் தேவையில்லை. மற்ற நிற வர்ணங்களைப் பொருத்தமட்டில், சுவர் வழுவழுப்பாக இருப்பதால், குறைந்த அளவு வர்ணங்களே போதுமானது. மொத்தத்தில் இந்த பிளாஸ்டரைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானச் செலவு கணிசமாகக் குறையும். 25 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.375தான்.

இவ்வாறு சிக்னேச்சர் லைஃப் ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநர் நிர்மல் கே.தீரன் கூறினார்.

SCROLL FOR NEXT