தமிழகம்

தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி.க்கள் 4 பேருக்கு பதவி உயர்வு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 4 கூடுதல் டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்வே காவல் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஆர்.சேகர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழல் கண்காணிப்பு பிரிவின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மெகபூப்ஆலம், அதே படையின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உளவுத்துறை கூடுதல்

டி.ஜி.பி. அசோக் குமார், அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி.ஜி.பி. பதவி புதிதாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சதீஷ் குமார் டோக்ரா, அதே பிரிவில் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.யாக இருந்த சீமா அகர்வால், ரயில்வே காவல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT