தமிழகம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: முதல்வர் அவசர ஆலோசனை

செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதானதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத் துக்கு அமைச்சர்கள் வராமல் இருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் மட்டும் கோட்டைக்கு வந்து பணிகளை கவனித்து வந்தார். சுமார் 10 நாட்கள் கழித்து அமைச்சர்கள் கோட்டைக்கு நேற்று வந்து அலுவல்களை கவனித்தனர்.

முதல்வரும் நேற்று காலை, சட்டம்-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மதியம் 2.15 மணிக்கு வீட்டுக்குச் சென்றார்.

இதற்கிடையே, ஜெயலலிதா வுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட செய்தி பரவி கட்சியினரிடையே கொந்தளிப்பான நிலை உருவானது. இதைத் தொடர்ந்து கோட்டைக்கு மாலையில் விரைந்த அவர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை செயலாளர் ஆபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோருடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜாமீன் மறுப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தொடர்பாக அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT