தமிழகம்

சென்னையில் வக்கீல்கள் உண்ணாவிரதம், மறியல்

செய்திப்பிரிவு

ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் எழும்பூர் வழக்கறிஞர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆலந்தூரில் வழக்கறிஞர்கள் இணைந்து, ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்தனர்.

இதனால் கிண்டி கத்திப்பாரா பாலத்திலும் ஜிஎஸ்டி சாலையிலும், அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT