கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வந்த நிலையில், சென்னையில் ஒரு நாள் கூட, கோடை மழை பெய்யாமல் இருந்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் நிலத்தடிநீர் குறைந்து, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
தற்போது அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தநிலையில், இந்த கோடையில் முதல் முறையாக சென்னையில் திங்கட்கிழமை மாலை மழை பெய்தது. பிற்பகலில் வடசென்னையில் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், பெரம்பூர் என தொடங்கிய மழை, பின்னர் படிப்படியாக சூறைக் காற்றுடன் எழும்பூர், மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தன.
சென்னையின் முக்கிய பகுதிகளான ராயப்பேட்டை, திருவல்லிக்கேணிஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மெரினா பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், காலை முதல் கடும் வெப்பமாக இருந்த சென்னையில் திங்கட்கிழமை மாலை குளிர்ச்சியாக சூழல் நிலவியது.
மெரினா கடற்கரை பகுதியில் வீசிய சூறைக்காற்று