`தி இந்து எட்ஜ்’ சார்பில் சார்பில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் கல்வி வழிகாட்டி கண்காட்சி, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் முஸ்லிம் அனாதை நிலைய வளாக ஏசி அரங்கில், நாளை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரதீப்குமார் தொடங்கி வைக்கிறார். பொறியியல் படிப்புகள் குறித்து ரமேஷ் பிரபா, மாணவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து மாலாமேரி மார்டினா, ஜெரி சில்வெஸ்டர் வின்சென்ட் ஆகியோரும், `நீட்’ தேர்வு குறித்து டாக்டர் எஸ்.மனோவா ராஜா, சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து டாக்டர் ஜெ.டி.வினோல்வின் ஜாப்ஸ், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மாணவர் களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்து டாக்டர் ஜெ.கார்த்திகேயன் உரையாற்று கிறார்கள்.
பிளஸ்2 கல்விக்குப்பின் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ, மாணவியரிடையே இருக்கும் குழப்பத்தை போக்கும் வகையில், அவர்களது மனநிலையை பரிசோதிக்கும் சிறப்பு சோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எந்த வகையில் எல்லாம் உயர்கல்விக்கு வழிகாட்ட முடியும் என்பதை, மனோநிலை குறித்த சோதனை மூலம் டாக்டர் என்.ராஜ்மோகன் விளக்குகிறார்.
விஐடி பல்கலைக்கழகம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி, மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரி, ஸ்டெர்லைட் நிறுவனம், `தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகின்றன.
கல்வி வழிகாட்டி கண்காட்சியில் நடத்தப்படவுள்ள மாணவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் இலவச சிறப்பு தேர்வில் பங்கேற்க >திருநெல்வேலி என்ற ஆன்லைன் முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். கல்வி வழிகாட்டி கண்காட்சி குறித்து >www.thehindueducationfair.com என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். அல்லது 98432 39249 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.