தமிழ் இலக்கிய எழுத்தாளர், சாகித்ய அகாதமி விருது பெற்ற அசோகமித்திரன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள இரங்கல் செய்தி
தனது வாழ்வின் பெரும் பகுதியை எழுத்துப்பணிகளுக்கு செலவிட்ட, பிரபல எழுத்தாளர் அசோக்மித்ரன் மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவின் சினேகிதர், ஒற்றன், கரைந்த நிழல்கள் போன்ற நாவல்களும், சிறு கதைகளும், ஏராளமான கட்டுரைகள் அமெரிக்க இலக்கியங்களின் மொழி பெயர்ப்பு என இவரது சிறப்பான எழுத்து பணிகள் ஏராளம், இதற்காக அவர் சாகித்ய அகாடமி உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது சிறுகதைகளில், நாவல்களில் வரும் கதை மாந்தர்கள் சமூகத்தின் யதார்த்தங்களை பிரதிபலித்தவை. மிக எளிய மக்களும், வாசித்தால் புரிந்து கொள்ளும் எழுத்து நடை அவருடையது.
கலையும் இலக்கியமும் வெறும் பொழுது போக்கிற்கானவை அல்ல அவை சமூக நலனுக்கானவை என்பதனை அவரது எழுத்துகள் உணர்த்துகின்றன. அவரது மறைவு தமிழ் எழுத்துலகிற்கும், இந்திய இலக்கியத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.