சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ராம்குமார் தான் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத் தப்பட்டது. பின்னர் ராம்குமாரை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கடந்த 4-ம் தேதி ராயப்பேட்டை மருத்து வமனையில் ராம்குமார் அனுமதிக்கப்பட்டி ருந்தபோது, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்தி ரேட் கோபிநாத், மருத்துவமனைக்கு நேரில் சென்று ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ராம்குமாரை ஜூலை 18-ம் தேதி(நேற்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ராம்குமாரின் 15 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. காவலை
நீட்டிப் பதற்காக ராம்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.
கடந்த முறை ராம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, பொதுமக் கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் நீதிமன்றத்தில் திரண்டனர். இதனால் பாதுகாப்பு குளறுபடிகள் அதிகமாக நடந்தன.
இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமாரிடம் விசாரணை நடத்தி, அவரது நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.