ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக புதிய அமைச்சரவை யின் முதல் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்றுநடக்கிறது. இதில், ஜெயலலி தாவின் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப்படு கிறது.
தமிழக முதல்வராக ஜெயல லிதா 6-வது முறையாக கடந்த மே 23-ம் தேதி பதவியற்றார். அதன் பிறகு, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இறுதிவரை பங்கேற்றார். தொடர்ந்து, செப்டம்பர் 21-ம் தேதி சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தலை மைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மறுநாளான 22-ம்தேதி இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 70 நாட்களுக்கு மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 4-ம் தேதி மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அடுத்த நாள், ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், அன்று மாலையே மெரினா கடற்கரை எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எம்எல்ஏக்கள் கூட்டம்
இதற்கிடையில், ஜெயலலிதா மறைந்ததாக அறிவிக்கப்பட்ட 5-ம் தேதி இரவு, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார். அதில், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப் பட்டார். உடனடியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது. அன்று இரவே, புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். ஏற்கெனவே பணியாற்றிய 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அமைச்சரவைக் கூட்டம்
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடக்க உள்ளது. ஜெயலலி தாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் மறை வுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படு கிறது. இதில் தலைமைச் செய லாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் கே.சண் முகம் மற்றும் சில துறைகளின் செயலர்கள் பங்கேற்பார்கள் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அரசின் 4-வது கூட்டம்
கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்த பிறகு, முதல் அமைச்சர வைக் கூட்டம் ஜூலை 6-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயல லிதா தலைமையில் நடந்தது. பிறகு, ஜெயலலிதா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கவனித்த துறைகள், நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப் படைக்கப்பட்டன. அமைச்ச ரவைக் கூட்டத்தையும் ஓ.பன்னீர் செல்வமே தலைமையேற்று நடத் துவார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார். இதன்படி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்டோபர் 19, 24-ம் தேதிகளில் அமைச் சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், 4-வது முறையாக இன்று அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது.