உயர் நீதிமன்ற பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத் தில் நீதிபதிகள் மற்றும் பதிவாளர் களின் நேர்முக உதவியாளர், துணை பதிவாளர்களின் நேர்முக எழுத்தர் ஆகிய பணியிடங்களில் காலியிடங்களை நிரப்புவதற் கான டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடந்தது.
57 ஆயிரம் பேர் எழுதினர்
இந்த நிலையில், இதர பதவி களான கணினி இயக்குபவர், தட்டச்சர், ரீடர், காசாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பணிகளில் உள்ள காலியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.
சென்னை உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்த இத்தேர்வை 57 ஆயிரம் பேர் எழுதினர்.
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 34 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
ஒட்டு மொத்தமாக உயர் நீதிமன்ற பணித் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 77 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.