தமிழகம்

சிட்டுக்குருவிகள் தின கொண்டாட்டங்கள்: முகமூடி அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், தன்னார்வ அமை ப்புகள் சிட்டுக்குருவிகள் தினத்தை நேற்று கொண்டாடினர். அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், சிட்டுக்குருவிகள் போன்ற முகமூடி அணிந்து பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பசுமைச் சங்கம் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

பசுமைச் சங்க மாணவர்கள் சிட்டுக்குருவி முகமூடி அணிந்து கல்லூரி முன்பு மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மனிதச் சங்கிலியை கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்து பேசியது: சுறுசுறுப்பாக ஓடியாடும் குழந்தைகளை சிட்டுக் குருவி களின் சுறுசுறுப்புடன் ஒப்பிட்டே சொல்வார்கள். சிட்டுக்குருவிகள் கூடு இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவு சிட்டுக்குருவிகள் இருந்தன. கிரா மங்கள், நகரங்கள் என அதிக அளவு எண்ணிக்கையில் இருந்த இப்பறவையானது தற்போது மக்களுடைய வாழ்க்கைமுறை மாற்றத்தால் குறைவாகிவிட்டது. இதை அதிக எண்ணிக்கையில் வரவைக்கும் முயற்சியாக எங் களுடைய பசுமைச் சங்கம் அட்டைப் பெட்டியில் கூடு மற்றும் ஆலோசனையும் வழங்கி வருகிறது என்றார்.

இதில் கல்லூரியின் நிதியாளர் பேராசிரியர் ஹெலன் ரத்ன மோனிகா மாணவ, மாணவிகளுக்கு முகமூடி வழங்கினார். மாணவர்கள் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க பதாகைகளை ஏந்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக, பசுமை சங்கத் தலைவர் பேராசிரியர் ஜெ.இ. வாஞ் சலின் பிரபாகரன் வரவேற்றார். பசுமைச் சங்கச் செயலாளர் எம்.ராஜேஷ், பொதுமக்கள் அனை வரும் தங்கள் வீடுகளில் பறவை களுக்கு தண்ணீர் வைக்க வேண் டும். இவ்வாறு செய்வதன் மூலம் பறவைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். கல்லூரியில் இருந்து 600 சிட்டுக்குருவி முகமூடிகள் கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நி லைப் பள்ளி, ஆனையூர், சிட்டம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்டது.

இரண்டாம் வாழ்க்கையை தொடங்கிய சிட்டுக்குருவிகள்

திருமங்கலத்தைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியது:

கடந்த நூற்றாண்டின் இறுதியில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை 80 சதவீத நகரங்களில் கணிசமாக குறைந்தது. காரணம் அலைக்கற்றைகளின் கதிர்வீச்சே என்று வாதிட்டனர். ஆனால், சூழல் அறிஞர்கள் மாறிவரும் நகரத்தின் கலாச்சாரமே என அறிவுறுத்தினர். இந்தியாவில் மொத்தம் 5 வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. அதில் முதல் வகை அடைக்கலாங் குருவி என்று அழைக்கப்படும் நமது சாதாரண சிட்டுக்குருவி. இதை ஆங்கிலத்தில் house sparrow என்று அழைப்பார்கள். இது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.

இரண்டாம் வகை சிந்து சிட்டு என்னும் குருவி. இது பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பஞ்சாப் வரை பரவி உள்ளது. மூன்றாம் வகை ஸ்பானிஸ் சிட்டு. இது இந்திய, நேபாள பகுதிகளில் வலசை வருவது. நான்காம் வகை ரூசட் சிட்டு. இது இமயத்தின் தென்கிழக்கு பகுதிகளை தாயகமாக கொண்டது. ஐந்தாம் இனம் மரக்குருவிகள் என்று அழைக்கப்படும் வகையாகும்.

பொதுவாக சிட்டுக் குருவிகள் அனைத்துமே நமது விவசாய நிலங்களை சார்ந்தே வாழ்ந்து வருகின்றன. சமீபத்திய விழிப்புணர்வால் சிட்டு குருவிகள் தங்களின் இரண்டாம் வாழ்க்கையை உலகில் வாழத் தொடங்கி உள்ளன என்றார்.

SCROLL FOR NEXT