தமிழகம்

ஜெ. ஆதரவு போஸ்டர்கள்: ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்

செய்திப்பிரிவு

மனிதனிடம் தெய்வம் ஜாமீன் கேட்பதா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து, மவுன உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதை முன்னிட்டு, அந்த பகுதி முழுவதும், ஜெயலலிதாவை வாழ்த்தி "தர்ம தேவதைக்கே அநீதியா", "நீதிக்கே தண்டனையா", "தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா" என்றெல்லாம் தமிழ்த் திரையுலகம் சார்பில் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதைக் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, "அம்மா நீதி தேவதை, என்றால், நீதிபதி குன்ஹா சாதரண மனிதர். கலியுகத்தில் ஒரு மனிதனிடம் தேவதை ஜாமீன் கோருவதா" என பதிவு செய்துள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து பலரும் அந்த பதிவிற்கு பதிலளித்துமுள்ளனர்.

SCROLL FOR NEXT