தமிழகம்

டெல்லியில் போராடும் விவசாயிகள் உடல் நலத்தை கருதி தமிழகம் திரும்ப வேண்டும்: மன்னார்குடி ரங்கநாதன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

டெல்லியில் போராட்டம் நடத்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், உடல் நலத்தை கருத்தில்கொண்டு போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலை வர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று அவர் கூறிய தாவது:

தமிழக விவசாயிகளுக்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தனது வயதை யும் பொருட்படுத்தாமல், டெல்லி யில் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது இந்தப் போராட்டம், நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அய்யாக்கண்ணு நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக் கிலும், விவசாயிகளுக்கு ஆதர வாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தச் சூழலில், தங்களது உடலை வருத்தி, ரத்தக் காயங் கள் ஏற்படும் அளவுக்கு விவசாயி களின் போராட்டம் நடத்திவருவது வேதனையளிக்கிறது. இனியும் பிரதமர் மவுனம் காக்காமல், தமிழக விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தமிழக விவசாயி களின் எதிர்பார்ப்பு.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், உடல் நலத்தை கருத்தில்கொண்டு போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, அய்யாக் கண்ணு உள்ளிட்ட தமிழக விவ சாயிகள் அனைவரும் ஊர் திரும்ப முன் வரவேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT