எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல் லாது என அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில், மார்ச் 10-க்குள் ஆளுநரின் செயலாளர், அவைத் தலைவர், முதல் வர், தலைமைச் செயலாளர், சட்டப் பேரவை செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அன்றைய தினம் பதிவான வீடியோ தொகுப்பையும் முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த பிப்.18-ல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதர வாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி வழக்கறிஞர் கள் பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வழக்கறிஞர் ரவி, வில்லி புத்தூர் ஆணழகன் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று பிற்பகலில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. இதனால் நீதிமன்ற அறை வழக்கறிஞர்களின் கூட்டதால் நிரம்பி வழிந்தது.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது வாதத்தில், ‘‘சாட்சிய சட்டம் பிரிவு 65(பி)-ன்படி சட்டப்பேரவையில் கடந்த பிப்.18-ம் தேதி அன்று நிகழ்ந்த நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பை அரசு சான்றொப் பத்துடன் வழங்கினால் மட்டுமே செல்லு படியாகும். ஆகவே அதற்கு விண்ணப் பித்துள்ளோம். இந்த வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் யாரும் சுதந்திரமாக வாக்களிக்கவில்லை’’ என்றார்.
வழக்கறிஞர் கே.பாலு சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ‘‘அவசர காலகட்டங்களில் சட்டப்பேர வையை எவ்வாறு நடத்துவது? அவைத் தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும்? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஜெகதாம்பிகா பால்- எதிர் கல்யாண் சிங் வழக்கில் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அந்த உத்தரவுகளை அவைத் தலைவர் பின் பற்றவில்லை. மாறாக சட்டப்பேரவை யில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவை இருமுறை ஒத்திவைக்கப் பட்டது. இதன்மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவை விதிகள் அப்பட்டமாக மீறப்பட் டுள்ளன. எனவே நம்பிக்கை வாக் கெடுப்பு செல்லாது’’ என வாதிட்டார்.
இதே கோரிக்கைக்காக தனியாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் ரவி தனது வாதத்தில், “எம்எல்ஏக்களை கேள்வி கேட்கும் உரிமை அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமே உண்டு. ஆகவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக ஆளுநரின் செயலாளர், அவைத் தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டப்பேரவைச் செய லாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரும் மார்ச் 10-க்குள் பதிலளிக்க வேண்டும். மேலும் பிப்.18 அன்று சட்டப்பேரவையில் நிகழ்ந்த வீடியோ தொகுப்புகளையும் பேரவைச் செயலாளர் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.