மூளைக்காய்ச்சலால் இறந்த மகனின் இறுதிச் சடங்குக்கு கூட பணம் இல்லாததால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மகன் உடலை அவரது தாய் தானமாக வழங்கினார்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளை யம் சண்முகம் என்பவரது மனைவி வனிதா. கணவரை பிரிந்து தனது மகன் நவீன்குமாருடன் (16) வசித்துவந்த இவர், மகனுடன் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். இந்நிலை யில், அவரது மகனுக்கு சில மாதங் களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கரூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக இரண்டு வாரங்களுக்கு முன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
இந்நிலையில், மகனின் இறுதிச் சடங்குக்குக்கூட பணம் இல்லாத தால், நவீன்குமாரின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையினர் அவரது உடலை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து தாயார் வனிதா கூறும்போது, எனது மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தேன். கரூர் மாவட்ட ஆட்சி யர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரி டமும் முறையிட்டேன். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் எனது மகன் இறந்தான். ஆனால், அடக்கம் செய்ய வழியில்லாததால் மகனின் உடலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட் டேன். அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்றார்.