தமிழகம்

சென்னையில் வெயில் தொடரும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு பகல் நேரத்தில் மழை குறைந்து வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 386 மி.மீ. மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மைய தகவல்கள் படி, செவ்வாய் மற்றும் புதன்கிழமை சென்னையில் மழை எங்கும் பதிவாகவில்லை. மாறாக வெயில் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப் படி சென்னையில் அதிகபட்சமாக 90.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. ஆனால், புதன்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்ச வெப்பம் 91.4 டிகிரியாக இருந்தது.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையின் அதிகபட்ச வெப்பம் 91.5 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பம் 77 டிகிரியாகவும் இருக்கும்.

ஒரு சில இடங்களில் மட்டும் இரவு நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் மற்ற இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT