தமிழகம்

நீதிமன்ற செய்திகளில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பெயர்களை வெளியிடக்கூடாது: ஊடகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மீது எம்.கல் லுப்பட்டி போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வும், சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சிறுவர் களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையின் முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் களை ஊடகங்களில் வெளியிடு வதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு 30 நாட்களில் கொள்கை முடிவெடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறார் களை அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது நட வடிக்கை எடுக்க இந்திய பத்தி ரிகை கவுன்சிலை தமிழக அரசு அணுகலாம்.

ஊடகங்களில் வெளியாகும் நீதிமன்ற செய்திகளில் வழக்கறிஞர் கள் பெயர்களும், நீதிபதிகளின் பெயர்களும் இடம்பெறுகின்றன. இது தேவையில்லை என கருது கிறோம். வழக்கறிஞர்கள் பெயர் வெளியிடப்படும்போது, அவர் களுக்கு மறைமுகமாக விளம்பரம் கிடைக்கிறது.

எனவே, நீதிமன்ற செய்திகளில் வழக்கறிஞர்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் அன்றி நீதிபதி களின் பெயர்களையும் வெளியி டக்கூடாது என ஊடகங்களை கேட்டுக்கொள்ள வேண்டும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பணி ஒதுக்கீடு வழங்குகிறார். அந்தப் பணியை விருப்பு, வெறுப்பு இல்லாமல் சட்டத்துக்கு உட்பட்டு நீதிபதிகள் நிறைவேற்றுகின்றனர். அவ்வாறு இருக்கும்போது உயர் நீதிமன்றம் தொடர்பான செய்திகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு என குறிப்பிட்டால் போதுமானது. இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு பதிவாளர் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை சிறுவர்கள் மீது பதிவு செய்யப் பட்டது பொய் வழக்கு என்றும், உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலால் வழக்கு பதிவு செய் யப்பட்டதாகவும் மாவட்ட குழந் தைகள் நலக்குழு அறிக்கை அளித் துள்ளது. இதனால் இந்த விஷயத் தில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மதுரை மாவட்ட எஸ்பி வழக்கை தொடர்ந்து கண்காணித்து சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரர் ஒரு வழக்கறிஞராக இருந்துகொண்டு விளம்பரம் பெற நீதிமன்றத்தை ஒரு மேடையாக பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மீது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் விசாரணை நடத்தி 6 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என அமர்வு உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT