தமிழகம்

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: உருவ பொம்மைகளை கழுதை மேல் வைத்து ஊர்வலம்

செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, அதற்குக் காரணமானவர்களின் உருவ பொம்மைகளை கழுதை மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று எரித்தனர்.

அதிமுக-வின் இந்த நூதனப் போராட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் நடைபெற்றது.

கோவை புறநகர் மாவட்ட பாசறை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து நேற்று போராட்டம் நடைபெற்றது.

கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி, ஆகியோரின் உருவ பொம்மைகளை கழுதை மேல் ஏற்றி வைத்து ஆனைமலை முக்கோணம் பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்தனர்.

இதில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட நிறைய பேர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT