தமிழகம்

சென்னையில் ராம்ஜெத்மலானி தவறி விழுந்து காயம்

செய்திப்பிரிவு

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஹோட்டல் அறையில் தவறி விழுந்து காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக வாதாடி, தூக்கு தண்ட னையை ரத்து செய்யக் காரணமாக இருந்தவர் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடை பெற்றி ருக்கும் நிலையில், வெள்ளிக் கிழமை சென்னை வந்த ராம்ஜெத்மலானி, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். சனிக்கிழமை காலை ஹோட்டல் அறையில் அவர் தவறி விழுந்துவிட்டார். லேசாக காயமடைந்த அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு, அவர் மும்பை புறப்பட்டு சென்றார்.

SCROLL FOR NEXT