மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.
நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்கள் சிவாலய ஓட்டம் நடத்தினர்.
தலைநகர் சென்னையில், உள்ள 10-க்கும் மேற்பட்ட சிவன் கோயில் களில், நேற்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணியளவில் சிவ னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
குறிப்பாக, மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில், சைதாப் பேட்டை- காரணீஸ்வரர், திருவொற் றியூர்- தியாகராஜ சுவாமி, மாடம் பாக்கம்- தேனுபுரீஸ்வரர், திருவான் மியூர்- மருந்தீஸ்வரர், கோயம் பேடு - குறுங்காலீஸ்வரர், பொழிச்ச லூர், அனகாபுத்தூர், வளசரவாக் கம் - அகஸ்தீஸ்வரர், பாடி- திருவலி தாயம், பாரிமுனை- மல்லிகேஸ் வரர், திருவல்லிக்கேணி- திருவெட் டீஸ்வரர், திரிசூலம்- திரிசூலநாதர், வியாசர்பாடி- ரவீஸ்வரர் என சென்னை மற்றும் சுற்றுவட் டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில், பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதலே விரதம் இருந்த அவர்கள், தங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள சிவன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.