தமிழகம்

அரசின் தொலைநோக்கு திட்டத்தில் தமிழக சுற்றுலாத் துறையில் ரூ.10,300 கோடிக்கு முதலீடு செய்யப்படும்: அமைச்சர் ந.நடராஜன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தில் சுற்றுலாத் துறையில் ரூ.10,300 கோடிக்கு முதலீடு செய்யப்படவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ந.நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய பயண ஏற்பாட்டாளர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 32-வது ஆண்டு கூட்டம் கிண்டியில் நேற்று நடந்தது. இந்திய பயண ஏற்பாட்டாளர்கள் குழும முதுநிலை துணைத் தலைவர் ராஜிவ் கோகில் வரவேற்புரை ஆற்றினார். இந்திய சுற்றுலாத்துறை செயலர் வினோத் ஜூட்ஷி, இந்திய பயண ஏற்பாட்டாளர்கள் குழும தலைவர் பிரனாப் சர்கார், தொழில் முனைவோர் குழும தலைவர் நகுல் ஆனந்த் ஆகியோர் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல தமிழக அரசு 2023 தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. பாரம்பரிய சுற்றுலா இடங்கள், கோயில்கள், கண்காட்சிகள் இடங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

உள்ளூர், வெளிநாடு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தொடர்ந்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முத்துப்பேட்டை உட்பட 5 இடங்களில் ரூ.403 கோடி செலவில் சுமார் 1500 கி.மீ தூரத்துக்கு கடற்கரை சுற்றுலா மையங்கள் மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக சுற்றுலாத் துறை அமைச் சர் ந.நடராஜன் பேசியதாவது:

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது. கோயில்கள், மலைகள், பாரம்பரிய இடங்கள் அதிகளவில் இருப்பதாலும், இத்துறையை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர, தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தில் ரூ.10,300 கோடிக்கு முதலீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் சுற்றுலாத்துறையை மேலும், மேம்படுத்தி, புதிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறை தொடர்பான கண் காட்சியும் நடந்தது. இதில் பல் வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்று லாத்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. பல்வேறு மாநி லங்களை சேர்ந்த 1600க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT