தமிழகம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்: ‘சாம்பல் புதன்கிழமை’ நாளை தொடங்குகிறது

செய்திப்பிரிவு

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் ‘சாம்பல் புதன்கிழமை’யுடன் நாளை தொடங்குகிறது. இதையொட்டி தேவாலயங் களில் சிறப்பு ஆராதனை நடை பெறும்.

ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை யாக கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக கடைபிடிக்கிறார்கள். தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படும்.

தவக்காலத்தில் பெரும் பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப் பது, தர்ம காரியங்கள் செய்வது என நற்செயல்களில் ஈடுபடுவர். வீடுகளில் திருமணம் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகள், கொண் டாட்டங்கள் இருக்காது. ஏசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் வகையில் கத் தோலிக்க தேவாலயங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அதோடு ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் பங்குமக்கள் ஒரே குடும்பமாக இணைந்து வெளியூர்களில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு திருயாத்திரை செல்வர்.

இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படும். அந்த வகையில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் நாளை தொடங்குகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராத னையும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

SCROLL FOR NEXT