தமிழகம்

அதிமுக, திமுகவின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும்: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தேமுதிகவை அழிக்க நினைக்கும் அதிமுக, திமுகவின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் உள்ளாட்சித் தேர்த லில் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்களை அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேமுதிகவின் 12-ம் ஆண்டு தொடக்க விழா 14-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. எந்த வொரு கட்சியில் இருந்தும் பிரிந்து வராமல், லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடவும் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னே றிய மாநிலமாக்கவும் ஆரம்பிக் கப்பட்டதுதான் தேமுதிக.

விவசாயிகள், மீனவர்களின் பிரச்சினை, வேலைவாய்ப்பு, மதுக் கடைகளால் ஏற்படும் சீர்கேடு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்கொடுமைகள், அண்டை மாநிலங்களுக்கிடையே உள்ள தண்ணீர் பிரச்சினை, சுகாதாரம், மருத்துவம், கல்வி, உள் கட்டமைப்பு, சாலை வசதிகள், போன்ற பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இவற்றுக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் வறுமை இல்லை என்ற நிலையை உருவாக்கவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும்.

எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்தபோதும் அந்த சவால்களை சந்தித்து தேமுதிக வீறுநடை போடுகிறது. தேமுதிகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று அதிமுகவும், திமுகவும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி, தேமுதிகவினரை மூளைச் சலவை செய்து கட்சியை அழித்து விடலாம் என்று அவர்கள் பகல் கனவு காண்கின்றனர்.

இந்த சூழ்ச்சிக்கு தேமுதிக வினர் ஆட்படாமல், உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன்பைவிட பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருக்க வேண்டும். வரப்போகும் தேர்தல்களை வெற்றிகரமாக சந்தித்து தேமுதிகவை தமிழகத் தில் அசைக்க முடியாத, தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கமாக்க வேண்டும்.

தேமுதிக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்துவோம். தேமுதிக வின் 12-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. கட்சிக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, மரக்கன்றுகளை நட்டு விழாவைக் கொண்டாட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு இயன் றதை செய்ய வேண்டும். வெற்றி, தோல்விகளை கண்டு அஞ்சாமல் எதிர்காலத்தில் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று தேமுதிகவினர் உறுதி ஏற்போம்.

உள்ளாட்சி தேர்தலில் எத்த னையோ முறைகேடுகளை அரங் கேற்றுவதற்கு அதிமுகவும், திமுக வும் திட்டமிட்டுள்ளன. அவற்றை முறியடித்து வெற்றி காண ஒற்றுமையோடு பாடுபடுவோம். உண்மையான கொள்கைக்காக, லட்சியத்துக்காக என்மேல் கொண்ட பற்றின் காரணமாக நம் இயக்கத்தில் உள்ள லட்சக் கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறி யுள்ளார்.

SCROLL FOR NEXT